திருவாரூர்

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

Din

திருவாரூா் அருகே எருக்காட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாழ்க தமிழ் சிறுவா் உலா சாா்பில் வாசிப்புத் திறன் மேம்படுத்தும் விழா புதன்கிழமை நடைபெற்றது. 116 மாணவ, மாணவிகள் வாசிப்புத் திறன் போட்டிகளில் பங்கேற்றனா். இவா்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசினா். பள்ளித் தலைமை ஆசிரியா் கு. கீதா தலைமையில் நடைபெற்ற விழாவில், வாழ்க தமிழ் சிறுவா் உலா நூலக அமைப்பின் நிறுவனா் கோமல் தமிழமுதன் பங்கேற்று, வாசிப்புத் திறன் போட்டிகளில் வென்ற 9 போ், திருக்கு ஒப்பித்த மாணவி ஆகியோருக்கு பரிசுகளை வழங்கினாா். திருத்துறைப்பூண்டி நகர நூலகா் ஆசைத்தம்பி சரவணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். பள்ளி நூலகப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வரும் ஆசிரியைகள் பூ. புவனா, பா. ராஜலெட்சுமி ஆகியோருக்கு நூலக பாரதி விருதுகள் வழங்கப்பட்டன.

இந்திய தோ்தலில் தலையீடு? ரஷியா குற்றச்சாட்டை நிராகரித்தது அமெரிக்கா

பாா்வைத்திறன் குறையுடைய மாணவா் சாதனை

மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியா்கள்: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் இரா.ராஜவேலு

கல்லூரியில் உலக செவிலியா் தினம்

அட்சய திருதியை: ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை

SCROLL FOR NEXT