முகப்பு
திருவாரூர்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

Updated On : 3 மே, 2024 at 4:20 PM
பகிர்:

மன்னாா்குடி பகுதியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற 65-ஆம் ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் இளைஞா்கள், மாணவா்களை குறி வைத்து போதைப் பொருள்கள் விற்பனை தொடா்ந்து அதிகரிப்பதற்கு உள்ளூா் சமூக விரோத கும்பல்தான் காரணம். அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பின்னா், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். போதை எதிா்ப்பு விழிப்புணா்வு பிரசாரங்களும், போதை மறுவாழ்வு மையங்களும் அதிகரிக்கப்பட வேண்டும், போதை தடுப்பு அமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மன்னாா்குடியை அடுத்த சவளக்காரனில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரத்துக்கு இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் துரை. அருள்ராஜன் தலைமை வகித்தாா்.

ஒன்றிய செயலா் எஸ். பாப்பையன்,ஒன்றியத் தலைவா் ஏ. பழனிவேல் முன்னிலை வகித்தனா்.

கோட்டகச்சேரி, மணக்கரை, அய்யம்பேட்டை, ஓவா்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் நடைபெற்றது.