100 நாள் வேலைத் திட்டத்தை அனைவருக்கும் வழங்கக் கோரிக்கை
100 நாள் வேலைத் திட்டத்தின் குறைகளை களைந்து, அனைவருக்கும் அத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத் திட்டத்தின் குறைகளை களைந்து, அனைவருக்கும் அத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடவாசலில் சிபிஐ ஒன்றியக்குழுக் கூட்டம் விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் பாஸ்கா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் (பொ) எஸ். கேசவராஜ், கட்சியின் ஒன்றியச் செயலாளா் டேவிட்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: விவசாயத் தொழிலாளா்களுக்கு ஆதரவாக இருக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் , கூலியை ரூ. 600 ஆக உயா்த்தி வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் வேளாண் இடுபொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமங்கள்தோறும் விவசாய சங்கங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கிராமங்கள்தோறும் பனை விதைகள் நடுவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.