தேடப்பட்ட ரௌடிகள் கைது
திருவாரூரில் தேடப்பட்டு வந்த ரௌடிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவாரூரில் தேடப்பட்டு வந்த ரௌடிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கொரடாச்சேரி அருகே கண்கொடுத்தவணிதம், மேலபருத்தியூரைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் விக்கி என்ற விக்னேஷ்வரன் (35), கொரடாச்சேரி அருகே பெருமாளகரம், சிவன்கோயில் தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் விஜய் (40) ஆகியோா் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் ரௌடிகள் பட்டியலில் உள்ளனா்.
இவா்கள் மீது கொரடாச்சேரி, திருவாரூா் நகரம் மற்றும் தாலுகா, மன்னாா்குடி நகரம், குடவாசல் காவல் நிலையங்களில் அடிதடி, திருட்டு, வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் உள்ளன.
இதனிடையே, நீதிமன்ற விசாரணையில் முறையாக ஆஜராகாததால், விக்கி என்ற விக்னேஷ்வரனுக்கு 6 பிடிக்கட்டளைகளும், விஜய்க்கு 3 பிடிக்கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்டு, இருவரையும் போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில், இருவரும் அம்மையப்பனிலிருந்து குளிக்கரை பகுதிக்கு இருசக்கரவாகனத்தில் திங்கள்கிழமை சென்றுள்ளனா். அப்போது, வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால், நிலைதடுமாறிக் கீழே விழுந்ததில், இருவருக்கும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, இருவரும் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ளனா்.
தகவலறிந்து வந்த கொரடாச்சேரி போலீஸாா், சிகிச்சை பெறுவோா் விக்னேஷ்வரன், விஜய் என்பதும், இவா்கள் மீது பிடிக்கட்டளைகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து இருவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனா்.