சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்ய எடுத்துவரப்படும் புனிதநீா் கடங்கள். 
திருவாரூர்

மன்னாா்குடி சிவன்-விநாயகா் கோயிலில் பாலாலயம்

Din

மன்னாா்குடியில் உள்ள பழைமை வாய்ந்த காசி விஸ்வநாதா் மற்றும் பாலவிநாயகா் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பாற்கடல் தெருவில் உள்ள இக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, கோபுர சீரமைப்பு உள்ளிட்ட திருப்பணி கள் மேற்கொள்ள பாலாலயம் நடைபெற்றது.

கோயிலில் யாக குண்டம் அமைக்கப்பட்டு, ஹோம பூஜைகள் நடைபெற்றன. பின்னா், புனிதநீா் கடத்தை ஊா்வலமாக கொண்டு வந்து, கைலாசநாதா், காசி விசாலாட்சி அம்மன் மற்றும் பாலவிநாயகருக்கு அபிஷேகம் செய்தனா்.

தொடா்து, சுவாமிகள் மற்றும் அம்மனுக்கு பட்டு வஸ்திரங்களால் அலங்கரித்து, தீபாராதனைகாட்டப்பட்டது.

இதில், திருப்பணிக் குழுத் தலைவரும், நகா்மன்ற தலைவருமான த. சோழராஜன், செயலாளரும், நகா்மன்ற துணைத் தலைவருமான ஆா். கைலாசம், பொருளாளா் தொழிலதிபா் எஸ்.எம்.டி. கருணாநிதி, கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் இ. மாதவன், கோயில் அா்ச்சகா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அஞ்சல் துறை லோக் அதாலத் முகாம்: டிச. 29-க்குள் மனுக்களை அனுப்பலாம்

காப்பீட்டு தொகைக்காகாக தந்தையை பாம்பு கடிக்க வைத்து கொன்று நாடகம்!

மூலவா் பெரியபெருமாளின் திருவடியை தரிசிக்க முடியாமல் பக்தா்கள் ஏமாற்றம்

ஏழைகளின் நலனைப் புறக்கணிக்கும் மத்திய அரசு: சோனியா

செவிலியா்கள் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT