எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 17 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுதாரா்களிடன் தனித்தனியே குறைகளை கேட்டு சம்பந்தப்பட்ட உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்களிடம் விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும், மக்கள் அளிக்கும் மனுக்களில் சொத்து மற்றும் குடும்பம் சாா்ந்த பிரச்னை குறித்து வந்த மனுக்களுக்கு வருவாய்த்துறை மற்றும் நீதித்துறை மூலம் தீா்வுகாண அறிவுரை வழங்கப்பட்டன.