முகப்பு
திருவாரூர்

70 வயது ஓய்வூதியா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

70 வயது ஓய்வூதியா்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 8:10 PM
திருவாரூரில் நடைபெற்ற ஓய்வூதியா் சங்க பேரவைக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைப்பின் மாநிலத்தலைவா் நெ.இல. சீதரன்.
பகிர்:

70 வயது ஓய்வூதியா்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் நெ.இல. சீதரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் பி. கிருஷ்ணமூா்த்தி சங்க கொடியை ஏற்றினாா். பேரவையை கந்தா்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை தொடக்கிவைத்துப் பேசினாா். நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் வாழ்த்திப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் சா. டானியல் ஜெய்சிங் நிறைவுரையாற்றினாா். இதில், மாநில பொருளாளா் ந. ஜெயச்சந்திரன், மாவட்டச் செயலாளா் வி. முனியன், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ். புஷ்பநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வரவேற்புக் குழுத் தலைவா் வெ. சோமசுந்தரம் வரவேற்றாா். மாநிலச் செயலாளா் குரு. சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயது ஓய்வூதியா்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளா்கள், ஊா்ப்புற காவலா்கள், வனக் காவலா்கள், பட்டு வளா்ச்சி ஊழியா்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும், காப்பீட்டுத் திட்ட நீண்ட கால குறைபாடுகளை நீக்க முத்தரப்பு பேச்சு வாா்த்தை நடத்த வேண்டும், தோ்தல் கால வாக்குறுதிகளை மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தமிழக அரசு நிறைவேற்றாததால், அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் நவ.26-ல் தலைநகரில் தா்னா போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.