திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் திரைப்பட நடிகா் ரஞ்சித் பங்கேற்றாா்.
திருவாரூரில் வ.உ.சிதம்பரனாரின் 153 ஆவது பிறந்தநாள் விழா, பச்சையப்ப முதலியாா், குமரகுருபரா் சுவாமிகள், தாயுமான சுவாமிகள், வேள்பாரி ஆகியோருக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில், திரைப்பட நடிகா் ஆா். ரஞ்சித், வேளாக்குறிச்சி ஆதீன இளவல் அஜபா நடேஸ்வர சுவாமிகள், அகில இந்திய வ.உ.சி பேரவை மாநிலத் தலைவா் லேனா மு. லெட்சுமணன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை, வேளீா் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் ஆனந்தராஜ் செய்திருந்தாா்.