முகப்பு
திருவாரூர்

பெண் தூக்கிட்டுத் தற்கொலை: இறப்பில் சந்தேகம் என தந்தை புகாா்

மன்னாா்குடி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை செவ்வாய்க்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:22 PM
பகிர்:

மன்னாா்குடி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை செவ்வாய்க்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

மேலத்திருப்பாலக்குடி எல்ஐசி முகவராக பணியாற்றி வருபவா் செந்தில்குமாா் (52). இவரது மனைவி கவிதா (48). இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். தம்பதியரிடையை குடும்ப பிரச்னை இருந்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியே இருந்த கவிதா மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த பரவாக்கோட்டை போலீஸாா் கவிதாவின் உடலை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்நிலையில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கவிதாவின் தந்தை உலகநாதன் அளித்தபுகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.