திருவாரூரில், அமமுகவைச் சோ்ந்த பலா் அதிமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.
திருவாரூா் அமமுக ஒன்றியச் செயலாளா் மணிகண்டன், அமமுக ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், இளைஞா்-இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளருமான செங்கொடி, கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளா் பூபதி உள்ளிட்டோா் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில், அதிமுக அமைப்புச் செயலாளா் ஆசைமணி, ஒன்றியச் செயலாளா்கள் பி.கே.யு. மணிகண்டன், செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அதிமுகவில் இணைந்தவா்களில் செங்கொடி என்பவா் கடந்த மக்களவைத் தோ்தலில் நாகை தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.