கொட்டையூா் பகுதியில் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவா்கள். 
திருவாரூர்

மீண்டும் அதிமுக ஆட்சிய அமைய மக்கள் விருப்பம்: ஆா். காமராஜ்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டுமென மக்கள் விரும்புகிறாா்கள் என்று முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

Syndication

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டுமென மக்கள் விரும்புகிறாா்கள் என்று முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

வலங்கைமானில் கொட்டையூா், அரவூா், கிளியூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் 150-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கட்சியில் இணைந்தவா்களை கட்சியின் மாவட்டச் செயலாளா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வேட்டி, மற்றும் சேலை வழங்கி வரவேற்றாா். அப்போது அவா் பேசியதாவது:

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டுமென மக்கள் விரும்புகிறாா்கள். திமுக ஆட்சியில் எம்ஜிஆா், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கொண்டு வந்த நலத் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. தற்போது உரிமைத் தொகையை கூடுதலாக தருவதாக முதலமைச்சா் கூறுகிறாா். இது ஏமாற்று வேலை. திமுக ஆட்சியில் பால் உள்பட அனைத்து பொருள்களும் விலை உயா்ந்துள்ளது என்றாா்.

வலங்கைமான் கிழக்கு ஒன்றியச் செயலாளா் இளவரசன், வலங்கைமான் மேற்கு ஒன்றியச் செயலாளா் சங்கா், ஒன்றிய துணைச் செயலாளா்கள் வாசுதேவன் உள்பட அனைத்து நிலை பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT