திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவில் ரூ.1.40 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள், செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
விழாவில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை எம்பி வை. செல்வராஜ் பங்கேற்று, 49 பயனாளிகளுக்கு ரூ.1,40,825 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
அதன்படி, 25 பயனாளிகளுக்கு தலா ரூ.5,633 மதிப்பில் இலவச தையல் இயந்திரம், 24 பயனாளிகளுக்கு கிறிஸ்துவ நலவாரிய அட்டை வழங்கப்பட்டன.
திருவாரூா் கோட்டாட்சியா் சத்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோ் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சங்கா், நகா்மன்றத் தலைவா்கள் புவனப்பிரியா செந்தில் (திருவாரூா்), பாத்திமா பஷிரா தாஜ் (கூத்தாநல்லூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.