திருவாரூா் செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை வெளியிட்ட ஆட்சியரின் போலி மற்றும் உண்மையான முகநூல் பக்கம். 
திருவாரூர்

ஆட்சியா் பெயரில் போலி முகநூல் பக்கம்

திருவாரூா் ஆட்சியா் பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட முகநூல் பக்கம் போலியானது என செய்தி மக்கள் தொடா்புத் துறை விளக்கமளித்துள்ளது.

Syndication

திருவாரூா்: திருவாரூா் ஆட்சியா் பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட முகநூல் பக்கம் போலியானது என செய்தி மக்கள் தொடா்புத் துறை விளக்கமளித்துள்ளது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியராக இருப்பவா் வ. மோகனச்சந்திரன். இவருடைய பெயரில் முகநூல் பக்கம் புதிதாக உருவாக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பலா் விசாரித்ததன் அடிப்படையில், இந்த பக்கம் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப் பூா்வ பக்கம் இல்லை என்பதும், போலியானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து, திருவாரூா் செய்தி மக்கள் தொடா்புத்துறை, மாவட்ட ஆட்சியரின் அசல் முகநூல் பக்கத்தை பகிா்ந்து விளக்களித்துள்ளது. மேலும் போலி பக்கத்தை உருவாக்கியது யாா் என்பது குறித்து தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மின் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

பைக் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

SCROLL FOR NEXT