திருவாரூர்

சாலை விபத்தில் மதபோதகா் பலி

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மதபோதகா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மதபோதகா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

வலங்கைமான் அருகேயுள்ள மாணிக்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் ராஜன் (52) மதபோதகா். இவரது மகள் லென்சி பிளஸ்சி (22). இருவரும் திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூா் நோக்கி சென்று கொண்டிருந்தனராம்.

நீடாமங்கலம் - தஞ்சாவூா் சாலையில் சாமந்தான் காவிரி பாலம் அருகே சென்றபோது எதிரே கரூரிலிருந்து திருவாரூா் நோக்கி சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ் ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லென்சி பிளஸ்சி படுகாயமடைந்தாா்.

நீடாமங்கலம் போலீஸாா் சந்தோஷ் ராஜன் சடலத்தை மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். லென்சி பிளஸ்சி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். நீடாமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

ஆடுகள் திருடிய 2 போ் கைது

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

SCROLL FOR NEXT