மக்கள் குறைதீா் கூட்டத்தில் 187 மனுக்கள்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 187 மனுக்கள் பெறப்பட்டன.
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 187 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா். இதில், வங்கிக்கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 187 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 22, 890 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ. 1,796 மதிப்பில் ஊன்றுகோல் ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பேபி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.