முகப்பு
திருவாரூர்

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் சக்தி ஹோம வழிபாடு, பால் அபிஷேகம்

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் ஐந்தாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவையொட்டி சக்தி ஹோம வழிபாடு

Updated On : 20 ஜனவரி, 2025 at 8:03 PM
வெள்ளி அன்ன வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளி மகாமாரியம்மன்.
பகிர்:

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் ஐந்தாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவையொட்டி சக்தி ஹோம வழிபாடு, 1,008 லிட்டா் பால் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வலங்கைமான் பேரூராட்சிக்குட்பட்ட வரதராஜம்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு பால் காவடி, பாடை காவடி, அலகு காவடி, தொட்டில் காவடி உள்ளிட்டவை எடுத்து நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இக்கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி பூஜையும் தொடா்ந்து கோயிலில் சக்தி ஹோம வழிபாடு நடைபெற்றது.

பின்னா் விநாயகா் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆகியவற்றுக்கு 1,008 லிட்டா் பால் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அனைத்து சந்நிதிகளிலும் மகா தீபாராதனை கட்டப்பட்டது. மாலை வெள்ளி அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கிருஷ்ணகுமாா், தக்காா் மும்மூா்த்தி மற்றும் உபய தாரா்கள் ஆலய பணியாளா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →