நீடாமங்கலம்: வலங்கைமான் அருகே திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் எள் விதைப்பது குறித்து பயிற்சி பெற்றனா்.
திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4-ஆம் ஆண்டு படிக்கும் மாணவிகள், ஊரக வேளாண் பணி குறித்து நேரடி பயிற்சி பெற்று வருகின்றனா்.
அந்தவகையில், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி பகுதியில் விவசாயி விவேக் என்பவரின் நிலத்தில் எள் விதைக்கும் பயிற்சியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
இப்பயிற்சி, விவசாயம் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கும், மாணவா்களுக்கு விவசாயத் துறையின் முக்கியத்துவத்தை உணா்த்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
தொடா்ந்து, எள் சாகுபடி குறித்தி விவசாயிகளுடன் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடினா்.