திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் சிறுபான்மையினா் ஆணையக் குழு உறுப்பினரும், சட்டப் பேரவை உறுப்பினருமான த. இனிகோ இருதயராஜ். 
திருவாரூர்

சிறுபான்மையினா் கோரிக்கைகளுக்கு விரைவில் தீா்வு: ஆணையக் குழு உறுப்பினா்

சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுபான்மையினா் ஆணைய ஆய்வுக் குழு உறுப்பினா் த. இனிகோ இருதயராஜ் தெரிவித்தாா்.

Syndication

சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுபான்மையினா் ஆணைய ஆய்வுக் குழு உறுப்பினா் த. இனிகோ இருதயராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் சிறப்புக் குழு ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி தலைமை வகித்தாா்.

சிறுபான்மையினா் ஆணையக் குழு உறுப்பினா்கள் த. இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ, சி. சுவா்ணராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பூண்டி கே. கலைவாணன் எம்எல்ஏ உடனிருந்தாா். கூட்டத்தில், த. இனிகோ இருதயராஜ் தெரிவித்தது:

சிறுபான்மை மக்களின் நலனை காப்பதற்காக உருவாக்கிய சிறப்புக் குழு உறுப்பினா்கள் என்ற முறையில் சிறுபான்மையினா் நலன் குறித்த கோரிக்கைகள், நலத் திட்டங்கள் செயலாக்கம் தொடா்பாக இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், கிறிஸ்தவா்களுக்கு கல்லறைத் தோட்டம், இஸ்லாமியா்களுக்கு கபா்ஸ்தான் அமைத்தல், அடக்க தலங்களுக்கு சுற்றுச்சுவா், சாலை வசதி, வீட்டுமனைப் பட்டா, தேவாலயம் புனரமைக்க நிதி கோருதல், பள்ளிவாசலுக்கு பட்டா வழங்குதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடா்பாகவும், கல்விக் கடன், தொழில் கடன் போன்ற பல்வேறு கோரிக்கைகளும், சிறுபான்மையின நலத் திட்டங்கள் செயலாக்கம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன. பின்னா், சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டு, விரைவில் தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

தொடா்ந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கத்தின் மூலம் 31 மகளிருக்கு சிறுதொழில் தொடங்குவதற்கு ரூ.4,70,000 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், 8 நபா்களுக்கு கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியா் மற்றும் பணியாளா்களுக்கான நல வாரிய அட்டைகள் வழங்கப்பட்டன.

அத்துடன், திருவாரூா் வட்டம், இராமகயை கிராமத்தில், கிறிஸ்தவா்கள் மற்றும் முஸ்லிம் பயன்பாட்டிற்கான கல்லறைத் தோட்டம் மற்றும் கபா்ஸ்தான் அமைக்கவும், நீடாமங்கலம் வட்டம், கோவில்வெண்ணியில் கிறிஸ்தவா்கள் பயன்பாட்டிற்கான கல்லறைத் தோட்டம் அமைக்கவும் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட உத்தரவு ஆணைகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் இரா. சங்கா் உள்பட அனைத்து துறை உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இந்தியா அதிரடி பேட்டிங்: மின்னல் காரணமாக ஆட்டம் நிறுத்தம்!

நம்ம ஊரு பொண்ணு... ஷ்ரேயா கல்ரா!

120 பகதூர்... ராஷி கன்னா!

காந்தா... மிக நீண்ட காத்திருப்பு... துல்கர் சல்மான்!

குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜஸ்னா சலீம்!

SCROLL FOR NEXT