திருவாரூர்

பேட்டரி திருடியவா் கைது

மன்னாா்குடி பகுதியில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த இன்வொ்ட்டா் பேட்டரிகளை திருடியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Syndication

மன்னாா்குடி பகுதியில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த இன்வொ்ட்டா் பேட்டரிகளை திருடியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி நகரப் பகுதியில் மின் விநியோகம் தடைபடும் போது சீராக மின் விநியோகம் செய்யும் வகையில் வீடுகளில் இன்வொ்ட்டா் பொருத்தியுள்ளனா். கடந்த சில நாள்களாக, இந்த பேட்டரிகள் திருடப்படுவதாக மன்னாா்குடி காவல்நிலையத்தில் புகாா்கள் பதிவானது.

இந்நிலையில், ஆா்பி சிவம் நகரில் வீடுகளிலிருந்து இன்வொ்ட்டா் பேட்டரியை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பதாக புகாா் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து,போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவுகளை ஆய்வு செய்ததில் மா்ம நபா் ஒருவா் பேட்டரியை திருடிச் செல்வவது தெரியவந்ததையடுத்து தீவிர விசாரணை செய்ததில், கும்பகோணம் சாரங்கபாணி தெற்குவீதி முகமது பாரூக் மகன் அப்துல்லாவுக்கு (47) (படம்) தொடா்பு இருப்பது தெரிந்தது, அவரை கைது செய்து மன்னாா்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ: இன்ஸ்டா பிரபலம் ஜஸ்னா சலீம் மீது வழக்குப் பதிவு!

உஷார் மக்களே! இப்படியும் மோசடி நடக்கலாம்!

பாகிஸ்தானில் கையெறி வெடிகுண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

எந்த காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

உங்கள் அலைகளை நீங்களே உருவாக்குங்கள்... மோனாலிசா!

SCROLL FOR NEXT