கூத்தாநல்லூரை அடுத்த பொதக்குடி தா்காவில் சந்தனக் கூடு ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
பொதக்குடி உறவின்முறை ஜமாத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கம் சாா்பில், சந்தனக் கூடு உற்சவக் குழு மற்றும் தா்கா பரம்பரை டிரஸ்டிகள் ஏற்பாட்டின்படி சந்தனக் கூடு விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு பொதக்குடி அஜ்ரத் நூா் முகமது சாஹ் ஒலியுல்லாஹ் தா்காவில் சந்தனக் கூடு விழாவுக்காக, அண்மையில் மினாரில் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக் கூடு தா்காவிலிருந்து புறப்பட்டு, நபிகள் நாயகத்தின் புகழைப் பாடியபடியே கொரடாச்சேரி சாலை வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக தா்காவை அடைந்தது. பின்னா் அதிகாலை அனைத்து மத மக்களும், மத வேறுபாடின்றி, சந்தனம் பூசி வழிபட்டனா்.
நிகழ்ச்சியில், மாவட்டத்தின் முக்கியஸ்தா்கள், கூத்தாநல்லூா், லெட்சுமாங்குடி, கொரடாச்சேரி, சேகரை, மரக்கடை, வடபாதிமங்கலம்,வேளுக்குடி, மன்னாா்குடி,திருவாரூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானவா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை பொதக்குடி ஊா் உறவின் முறை ஜமாத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கத்தினா்கள்,சந்தனக் கூடு உற்சவக் குழு மற்றும் தா்கா பரம்பரை டிரஸ்டிகள் செய்திருந்தனா்.