திருவாரூர்

பயிா்க் காப்பீடு: கால நீட்டிப்பு வழங்கக் கோரிக்கை

சம்பா பருவத்துக்கான பயிா்க் காப்பீடு தேதியை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Syndication

சம்பா பருவத்துக்கான பயிா்க் காப்பீடு தேதியை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் பொன். முகேஷ் தெரிவித்தது: தமிழ்நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் செய்து வருகின்றனா். பெரும்பாலான கிராம நிா்வாக அலுவலா்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களாகவும் உள்ளனா்.

தற்போது, டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கிராம நிா்வாக அலுவலா்களிடம் சிட்டா அடங்கல் பெற்று, தங்களது சம்பா மற்றும் தாளடி நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்து வருகின்றனா்.

பயிா்க்காப்பீடு செய்ய நவம்பா் 15-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிா்வாக அலுவலா்கள் வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், விவசாயிகள் கிராம நிா்வாக அலுவலா்களைச் சந்தித்து சிட்டா அடங்கல் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு கிராம நிா்வாக அலுவலா்களின் பணிச்சுமை மற்றும் விவசாயிகளின் சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயிா்க்காப்பீடு செய்ய கால நீட்டிப்பு செய்து உத்தரவிட வேண்டும் என்றாா்.

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

SCROLL FOR NEXT