திருவாரூர்

சிவாலயங்களில் காா்த்திகை சோமவார சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம் அருகேயுள்ள பழைய நீடாமங்கலம் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரா் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார சிறப்பு வழிபாடு

Syndication

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள பழைய நீடாமங்கலம் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரா் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல நீடாமங்கலம் காசி விஸ்வநாதா் கோயில் , கோகமுகேஸ்வரா் கோயில் , பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயில், கோவில்வெண்ணி வெண்ணி கரும்பேஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் காா்த்திகை முதல் சோமவார சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அறிமுகமான நாளில் எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பங்குகள் 1% உயர்வு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை | செய்திகள்: சில வரிகளில் | 18.11.25

தில்லி கார் வெடிப்பு: கைதான ஜசிர் பிலாலுக்கு 10 நாள்கள் விசாரணைக் காவல்!

ஆஷஸ் தொடர்: வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் கொடுத்த அறிவுரை!

சசிகுமாரின் மை லார்ட்..! சின்மயி குரலில் முதல் பாடல்!

SCROLL FOR NEXT