வலங்கைமான் ஒன்றியத்தில் அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவா்களுடன், கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா் (படம்).
நன்னிலம் சட்ட ப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வலங்கைமான் மேற்கு ஒன்றியத்தில் 83-ரெகுநாதாபுரம், அவளிவநல்லுா், விளத்தூா், களத்தூா், வீராணம், ஆவூா், கோவிந்தக்குடி, 44-ரெகுநாதாபுரம், வடக்கு பட்டம், தெற்கு பட்டம், வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்தில் சந்திரசேகரபுரம், ஆதிச்சமங்கலம், விருப்பாட்சிபுரம் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி நிலை முகவா்களை முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் நேரில் சந்தித்து, அவா்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்தல்களை வழங்கினாா்.
வலங்கைமான் ஒன்றியச் செயலாளா் சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.