சென்னை: குடும்ப ஆட்சி முறைகேட்டில் திமுகவிினர் சம்பாதித்த 'ஹவாலா பணத்தை' பறிமுதல் செய்து மக்களிடம் திருப்பித் தருவோம் என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பெரிய அளவிலான ஊழல், நிர்வாகத் தோல்வி மற்றும் "குடும்ப ஆட்சி" என்று ஆளும் திமுக அரசின் மீது கடுமையான குற்றம் சாட்டை வைத்தார்.
"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற தனது மாநில அளவிலான பிரசாரத்தின் கீழ் 183 ஆவது சட்டப்பேரவைத் தொகுதியான அம்பத்தூர் செங்குன்றம் சாலைப் பகுதியில் உள்ள ராக்கி திரையரங்கம் அருகே திரண்டிருந்த பெரிய கூட்டத்தினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
மதுரையில் எடப்பாடி பழனிசாமி "துரோகி" என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். யார் துரோகி..? தமிழ்நாட்டை காட்டிக் கொடுத்தது திமுக தலைமைதான். ஸ்டாலின் தான் துரோகி, மாணவர்களை, இளைஞர்களை, மக்களை சீரழித்த துரோகி ஸ்டாலின். கருணாநிதி குடும்பம் தமிழ்நாட்டுக்கு செய்தது துரோகம் மட்டுமே. ஸ்டாலின் ஐந்து ஆண்டு ஆட்சிக் காலத்தில் அவரது குடும்பத்தினர் மட்டுமே பயனடைந்துள்ளனர் என்றும், தற்போதைய ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாடு கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஒரே நோக்கம் "கொள்ளையடிப்பது
அவர்களது ஒரே நோக்கம் "கொள்ளையடிப்பது" என்றும், இரண்டு நாள்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட பிரச்னைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டார். "அவருக்கு தைரியம் இருந்தால், எனது கேள்விகளுக்கு பதிலளித்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யத் தவறிவிட்டார்" என்று பழனிசாமி கூறினார்.
அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்த பழனிசாமி, வறட்சி, கஜா புயல் மற்றும் கரோனா-19 தொற்றுநோய்களின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, பள்ளி படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தில், தேர்வு நடத்தினோம், குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ததாகவும், விரைவான நிவாரணம் வழங்கியதாகவும், சுகாதார நெருக்கடியை திறம்பட நிர்வகித்ததாக கூறினார்.
மேலும், இலவச ரேஷன் விநியோகம், குடும்ப அட்டைதாரர்களுக்கு நிதியுதவி, அம்மா உணவகத் திட்டம் மற்றும் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் என மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தோம். அதனால் அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என போற்றப்படுகிறது என முந்தைய ஆட்சியின் சாதனைகளை குறிப்பிட்டு பேசினார்.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஊழல்
அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, தமிழத்தில் உள்ள ஆறாயிரம் மதுக்கடைகளிலும் நாள் ஒன்றுக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கப்படுகிறது. ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதால் நாள் ஒன்றுக்கு ரூ.15 கோடி, மாதம் ரூ.450 கோடி ஆண்டுக்கு ரூ.5,400 கோடி என இந்த நான்கு ஆண்டுகளில் ரூ.24 ஆயிரம் கோடி என விஞ்ஞான முறையில் கொள்ளையடித்திருப்பதாகவும் கூறினார்.
ஸ்டாலின் அரசில் உள்ள அமைச்சர்கள் ஊழல் மற்றும் ஹவாலா தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்வதாகவும், நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக நீதிமன்றங்களை நாடியுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் பாலாஜியை யாரும் எளிதில் மறக்க மாட்டார்கள். டாஸ்மாக் வழக்கில் 453 நாள் சிறையில் இருந்தார். இப்போது அமைச்சர் கே.என். நேரு ஹவாலா மோடியில் சிக்கியுள்ளார்.
குடிநீர் வழங்கல் துறை நகர்ப்புற அமைச்சர் வசம் உள்ளது. ஒரு பணியிடத்துக்கு ரூ.30 லட்சம் முகல் 35 லட்சம் வரை பணத்தை வாங்கிக்கொண்டுதான முறைகேடாக பணியாணை வழங்கியுள்ளார்கள். பல்வேறு பணிகளுக்கு கமிஷம் வங்கியுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஊழல் நிறைந்த அரசு என்பதற்கு இதுவே சான்று.
வறுமை எங்கே ஒழிந்தது?
திமுக ஆட்சிக் காலத்தில் வறுமை ஒழிக்கப்பட்டதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். எங்கே ஒழித்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியவர், தமிழ்நாட்டின் மொத்த கடன் அதிகரித்துள்ளதாகவும், அதிக அளவில் கடன் வாங்கிய போதிலும், அரசு அர்த்தமுள்ள வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தத் தவறிவிட்டதாகவும், அதற்கு பதிலாக நிதியை திருடி திமுக குடும்பத்துக்கும் ஹவாலா பணம் வெளிநாட்டுக்கும் திருப்பிவிட்டதாகவும்அவர் குற்றம் சாட்டினார். மேலும் மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும் குடும்ப ஆட்சி முறைகேட்டில் திமுகவினர் சம்பாதித்த 'ஹவாலா பணத்தை' பறிமுதல் செய்து மக்களிடமே் திருப்பித் தருவோம் என்றார்.
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்
வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக திமுகவை குற்றம் சாட்டிய பழனிசாமி, முக்கிய பதவிகளை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வகித்து வருகிறார்கள் என்றும், முதல்வர் ஸ்டாலின் மகனை அரசாங்கத்தில் ஒரு உயர் பதவிக்கு உயர்த்துவது குறித்தும் கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலின் பச்சைப் பொய் பேசுகிறார்
தொழில்துறை மேம்பாடு குறித்து பேசுகையில், பெரிய முதலீடுகளைப் பெறுவது மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்ற ஸ்டாலின் அரசின் திட்டங்களை மறுத்த பழனிசாமி, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உண்மையான வேலைகளாக மாற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற முதலீட்டாளர் உச்சிமாநாடுகளுடன் இதை அவர் வேறுபடுத்தினார், இது கணிசமான முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுத்ததாக கூறியவர், தொழில் முதலீட்டை ஈர்த்ததாக ஸ்டாலின் கூறுகிறார். அப்படி ஈர்க்கப்பட்டதா? இந்த நான்காட்டில் ஸ்டாலின் பச்சைப் பொய் பேசுகிறார்.
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பது மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்துவது போன்ற வாக்குறுதிகளை அரசாங்கம் நிராகரித்தாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிவித்த பழனிசாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதாந்திர நிதி உதவி அதிகரிப்பு, ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம், வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுவசதி, இரு சக்கர வாகனங்களுக்கு மானியம், கல்விக் கடன் தள்ளுபடி, இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், ஜல்லிக்கட்டு போட்டியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி, சிறுபான்மை பெண் தொழில்முனைவோருக்கு வட்டியில்லா கடன்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கியவர், வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், "குடும்ப ஊழல் ஆட்சிக்கும் வாரிசு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்" தேர்தல் இது. நிர்வாக திறமையன்ற திமுக அரசுக்கு முடிவு கட்ட வேண்டியதை தமிழ்நாடு மக்களே முடிவு செய்வார்கள். "குடும்ப கட்சி, குடும்ப ஆட்சி மற்றும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவோம்" என்றும், தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் "பொற்காலம்" மீண்டும் கொண்டு வருவோம் என்று பழனிசாமி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.