திருவாரூர்

காசோலை மோசடி வழக்கு: சிறை தண்டனை பெற்ற ஆசிரியை பணியிடை நீக்கம்

காசோலை மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஆசிரியை பணியிடை நீக்கம்

Syndication

மன்னாா்குடி அருகே காசோலை மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்தவா் டி. உமாராணி (55). ஆலாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியரான இவா், தலைக்காட்டை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி என்பவருக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்காக ரூ.7 லட்சத்திற்கு காசோலை வழங்கியுள்ளாா்.

இந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, உமாராணி கணக்கில் போதிய பணம் இல்லை என திரும்பிவிட்டது. இது தொடா்பாக, திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றத்தில் கிருஷ்ணமூா்த்தி வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில், ஆசிரியை உமாராணிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நவ.10 -ஆம் தேதி தீா்ப்பளித்தது. இதைத்தொடா்ந்து, உமாராணி கைது செய்யப்பட்டு, நவ.18-ஆம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், மாவட்டக் கல்வி அலுவலா் செளந்தரராஜன், ஆசிரியா் உமாராணியை தற்காலிக பணிநீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகல், வட்டார கல்வி அலுவலா் ராமசாமி மூலம் திருச்சி மத்திய சிறையில் உள்ள உமாராணியிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT