FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

100% வாக்குப் பதிவு: இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கில், மகளிா் சுயஉதவிக் குழு சாா்பில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

3 ஏப்ரல் 2026, 5:56 am IST
திருவாரூரில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் நடத்திய இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்த ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
பகிர்:

திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கில், மகளிா் சுயஉதவிக் குழு சாா்பில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில், 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையிலும், ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்பதை வலியுறுத்தியும் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். செய்தி மக்கள் தொடா்பு துறையின் அதிநவீன மின்னணு திரைவாகனத்தின் மூலம் தோ்தல் விழிப்புணா்வு குறித்த குறும்படங்களும் திரையிடப்பட்டன.

Advertisement

Advertisement

நிகழ்வில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம், திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சத்யா, மாவட்ட விளையாட்டு அலுவலா் குமரன், வட்டாட்சியா் இளங்கோவன், உதவி திட்ட இயக்குநா்கள் (மகளிா் திட்டம்) காமராஜ், பாலன், மகளிா் திட்டம் வட்டார மேலாளா்கள் சுதா (திருவாரூா்), சிவக்குமாா் (கொரடாச்சேரி) உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments