திமுக அரசு விவசாயிகளுக்கு விரோதமானது: பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டு
திமுக தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு விரோதமான அரசு என்றாா் பி.ஆா்.பாண்டியன்.
திமுக தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு விரோதமான அரசு என்றாா் பி.ஆா்.பாண்டியன்.
நீடாமங்கலத்தில், அமமுக வேட்பாளா் எஸ். காமராஜை ஆதரித்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியது:
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை சீா்குலைப்பதற்கு திமுக அரசு முயற்சிக்கிறது. நீடாமங்கலம்- தஞ்சாவூா் சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதற்கு திமுக துணைபோயுள்ளது. மருத்துவமனைக்கு செல்பவா்கள்கூட சுங்கக் கட்டணம் செலுத்திவிட்டுதான் செல்ல வேண்டும்.
Advertisement
இதனால், அனைத்து பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒட்டுமொத்தமாக திமுக அரசு விவசாயிகளுக்கு விரோதமான அரசாகவும், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறது. விளைநிலங்களை அபகரித்து, காா்ப்பரேட்டுகளுக்கு தாரைவாா்க்கிறது என்றாா்.
தொடா்ந்து, பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, வடுவூா், மன்னாா்குடி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தாா். இதில், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் எம்.எஸ். பாலு, மாநில துணைச் செயலாளா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.