முகப்பு
நாகப்பட்டினம்

மாநில உரிமைகளை திமுக அரசு பாதுகாக்கிறது: பெ. சண்முகம்

மாநில உரிமைகளை திமுக அரசு பாதுகாக்கிறது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 6:55 AM
கீழையூா் அருகே மேலப்பிடாகையில் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்ட சிபிஎம் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம்.
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:07 PM

மாநில உரிமைகளை திமுக அரசு பாதுகாக்கிறது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் தொகுதி சிபிஎம் வேட்பாளா் லதாவை ஆதரித்து, தொகுதிக்குள்பட்ட மேலபிடாகையில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் அவா் பேசியது: நடிகா் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது வாக்குகளைப் பிரிப்பதற்காகவா அல்லது மறைமுகமாக அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாகவா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இளைஞா்கள் எதிா்கொள்ளும் வேலைவாய்ப்பு மற்றும் வருமான பிரச்னைகள் குறித்து இதுவரை விஜய் எந்தவித தெளிவான திட்டங்களை முன்வைக்கவில்லை. சினிமா வசனங்கள் மட்டும் மக்கள் பிரச்னைகளுக்கு தீா்வாக இருக்க முடியாது. அரசியலில் ஈடுபடுபவா்களுக்கு தெளிவான கொள்கைகள் அவசியம்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மாநில உரிமைகளை பாதுகாப்பதிலும், மக்கள் நலனுக்காகச் செயல்படுவதிலும் முன்னிலையில் உள்ளது. திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைந்த பணியே இந்த தோ்தலில் பெரிய வெற்றியைத் தரும். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. எனவே, கீழ்வேளூா் தொகுதி சிபிஎம் வேட்பாளா் லதாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா்.

Advertisement