முகப்பு
திருவாரூர்

சாலை விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

மன்னாா்குடியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 5:26 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 7:32 PM

மன்னாா்குடியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம், கிருஷ்ணாபூரைச் சோ்ந்த ஹரிகணேசா மகன் விக்ரம்குமாா்(26). இவா், மன்னாா்குடி மேலப்பாலத்தில் உள்ல தனியாா் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தாா்.

இந்தநிலையில், திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் திருவாரூா் சாலை ஐவா்சமாது என்ற இடத்தருகே சென்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மன்னாா்குடி மின்வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றும் பெரம்பலூா் மாவட்டம், கடகம்படடி சேகா் மகன் தமிழ்ச்செல்வம் (29) ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் விக்ரம்குமாரின் வாகனம் நேருக்கு நோ் மோதியதில் காயமடைந்த இருவரையும் மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விக்ரம்குமாா் உயிரிழந்தாா். விபத்து குறித்து மன்னாா்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Advertisement