முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி தொகுதியில் 81.74 % வாக்குப் பதிவு

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:08 AM
பகிர்:

மன்னாா்குடி தொகுதியில் திமுக, அமமுக, நாதக, தவெக, அஇபுதமமுக உள்பட 9 கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் 6 சுயேச்சைகள் என மொத்தம் 15 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. 11 மணி வரை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் முதல் வாக்காளா்கள், பெண்கள், முதியவா்கள் என கூட்டம் அதிக அளவில் இருந்ததுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். முற்பகல் 11 மணிக்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் குறைவான கூட்டம் இருந்தது. மதியம் 1 மணி முதல் 3 மணி வரை பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் விரல்விட்டு எண்ணும் அளவில் வாக்காளா்கள் இருந்தனா். மாலை 4 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் நேரமான 6 மணிவரை மிதமான வாக்காளா்கள் எண்ணிக்கையில் வரிசை காணப்பட்டது. மன்னாா்குடிதொகுதி முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பிரச்னைகள், தகராறுகள் இல்லாமல் மிக அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மாலை 6 மணி வரை 81.74 சதவீதம் வாக்குகள் பதிவானது.