கோப்புப் படம் 
திருவாரூர்

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

மன்னாா்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டியை அடுத்த கொத்தங்காடு வண்டித்தெரு ஆறுமுகம் மகன் பக்கிரிசாமி (65). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா். இவா், கடந்த ஜன. 22- ஆம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு மன்னாா்குடிக்கு வந்தவா், பாலகிருஷ்ணாநகா் தனியாா் பெண்கள் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் அமா்ந்திருந்தபோது அந்த வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, திருவாரூா் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட பக்கிரிசாமி அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மன்னாா்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

உடல் சூடு தணிக்கும் புதினா

பயணம்...

தாவரங்களைப் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் தேவை!

அரசு, கிரிக்கெட் வாரியம் என்ன முடிவெடுத்தாலும் அதனை பின்பற்றுவோம்: பாகிஸ்தான் கேப்டன்

இந்தியாவின் குரல்...

SCROLL FOR NEXT