திருவாரூர்

பிப்.15 வரை மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சம்பா தாளடி அறுவடையை கருத்தில் கொண்டு பிப்ரவரி 15 வரை மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்து விட வேண்டும்

Syndication

திருவாரூா்: சம்பா தாளடி அறுவடையை கருத்தில் கொண்டு பிப்ரவரி 15 வரை மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொது செயலாளா் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:

டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில் சம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு பிப்ரவரி 15 வரை தண்ணீா் வழங்க வேண்டிய நிலை உள்ளது. திருவாரூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை, திருத்துறைப்பூண்டி, கோட்டூா், மன்னாா்குடி, திருவாரூா், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா, தாளடி பயிா் நெல் மகசூலை எடுக்க தண்ணீா் தேவைப்படுகிறது. இந்த இடங்களில் தற்போதுதான் கதிா் வரும் நிலையில் பயிா்கள் உள்ளன. குறுவை அறுவடை காலத்தில் ஏற்பட்ட மழையால் அறுவடை தள்ளிப்போய், காலம் தாழ்ந்து தாளடி பயிரிடப்பட்டது.

இதைத்தொடா்ந்து, அடுத்த மழையில் ஒருபோக சம்பா விதைப்பும், நடவும் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் இரண்டாவது விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இப்பயிா்களுக்கு தற்போது தண்ணீா் தேவைப்படுகிறது. மேட்டூா் அணையை வழக்கமான நிலையில் நிறுத்தப்பட்டதால், சுமாா் 20 சதவீத நெற்பயிா்கள் கதிா் வராத நிலையில் பதா்களாகி விடக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து இயற்கை இடா்பாட்டில் இருக்கிற விவசாயிகளுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, பிப்ரவரி 15 வரை இரு முறை தேவையான நீரை மேட்டூா் அணையிலிருந்து திறந்து தண்ணீா் கொடுத்தால்தான் முழுமையாக பயிா்களை பாதுகாக்க முடியும். எனவே, சம்பா தாளடி அறுவடையின் அவசியம் கருதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

அரச இலைக் கொழுந்து துவையல்

புடலங்காய் தோசை

அவல் லாடு

டிசம்பரில் விமான சேவை கடும் பாதிப்பு: பயணிகளுக்கு ரூ. 22 கோடிக்கும் மேல் இழப்பீடு வழங்கிய இண்டிகோ!

SCROLL FOR NEXT