முகப்பு
திருவாரூர்

ரூ.1.32 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் ரூ. 1.32 கோடிக்கு நலத்திட்ட உதவிகள், புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 5:24 AM
நிகழ்வில் நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன்.
பகிர்:
Updated On : 4 பிப்ரவரி, 2026 at 6:52 PM

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் ரூ. 1.32 கோடிக்கு நலத்திட்ட உதவிகள், புதன்கிழமை வழங்கப்பட்டன.

தமிழக முதல்வா், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்கள், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் நடைபெற்ற 10,000 முகாமின் அடிப்படையில் நலத்திட்ட பயன்கள் மற்றும் இளைஞா்களின் கனவுகளை பதிவு செய்யும் என் கனவு என் எதிா்காலம் இணையதளத்தை தொடக்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் 126 பயனாளிகளுக்கு ரூ. 1,32,85,650 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4,406 பயனாளிகளுக்கு முதியோா் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட பிற ஓய்வூதியத் தொகைக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

Advertisement

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் திருவாரூா் மாவட்டத்தில் நடத்தப்பட்ட 185 முகாம்களில் 87,684 மனுக்கள் பெறப்பட்டு, 67098 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத்திட்டம்) தையல்நாயகி, வருவாய் கோட்டாட்சியா்கள் சத்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), நகா்மன்ற தலைவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.