முகப்பு
புதுக்கோட்டை

வாக்களிப்பு விழிப்புணா்வு நிகழ்வில் வெளிநாட்டவா்கள் பங்கேற்பு!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி புதன்கிழமை மாலை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் வெளிநாட்டவா் பங்கேற்றனா்.

Updated On : 26 மார்ச், 2026 at 8:46 PM
கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரான்ஸ் நாட்டவா்கள்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி புதன்கிழமை மாலை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் வெளிநாட்டவா் பங்கேற்றனா்.

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வின்போது அலங்கரிக்கப்பட்ட வளைவுகள், தற்படம் எடுக்கும் சுழலும் இயந்திரத்துடன் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஏராளமான பொதுமக்கள், கல்லூரி மாணவா்கள் குழுமியிருந்தனா்.

அப்போது அங்கு வந்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வரவேற்று, ரோஜா மலா்கள் கொடுத்து இந்தியத் தோ்தல் குறித்து விளக்க உரையாற்றினாா். இதில் நெகிழ்ந்த பிரான்ஸ் நாட்டுப் பயணிகள் அவருக்கு நன்றி கூறி புறப்பட்டனா்.

வெளிநாட்டவருக்கு விளக்க உரையாற்றிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.