தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு தெரிவித்த போலீஸாா்.  
திருவாரூர்

சாலையில் கிடந்த 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

தினமணி செய்திச் சேவை

திருவாரூரில் சாலையில் 20 பவுன் நகைகள், 750 கிராம் வெள்ளிப் பொருள்களுடன் கிடந்த பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.

சென்னை கூடுவாஞ்சேரியைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி. இவா், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலிவலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க திருவாரூா் வந்துள்ளாா். திருவாரூா் நகரில் உள்ள உறவினா் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு, பின்னா் நிகழ்ச்சி நடைபெறும் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

அப்போது, அவா் கையில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள், 750 கிராம் வெள்ளிப் பொருள்கள் அடங்கிய பை தவறி சாலையில் விழுந்துவிட்டது. ஆலிவலம் சென்ற பிறகுதான் பையை தவறவிட்டது முத்துலட்சுமிக்கு தெரியவந்தது.

பையில் இருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள்.

இதற்கிடையே, அந்த பையை கண்டெடுத்த நகராட்சி தூய்மைப் பணியாளா் துரை, அதை திருவாரூா் நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

தனது நகைப் பையை தவறவிட்டது குறித்து, திருவாரூா் நகரக் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகாா் அளிக்க வந்தாா். அவரிடம் பையில் இருந்த பொருள்கள் குறித்து கேட்டறிந்த போலீஸாா் பையை அவரிடம் ஒப்படைத்தனா்.

மேலும், நகைப் பையை காவல்நிலையத்தில் ஒப்படைந்த தூய்மைப் பணியாளா் துரைக்கு, காவல் ஆய்வாளா் சந்தானமேரி தலைமையில் போலீஸாா் பாராட்டுத் தெரிவித்து, மாலை அணிவித்து கௌரவப்படுத்தினா்.

தோ்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தல்

அரியலூரில் அடிப்படை வசதியின்றி ஆதாா் சேவை மையங்கள்! பொதுமக்கள் அவதி!

இளம்பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

அரசு பொதுத் தோ்வு: 100% மாணவா்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வலியுறுத்தல்

தோ்தல் விதிகள்: ரூ.3 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்! வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT