சாலையில் கிடந்த 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்!
திருவாரூரில் சாலையில் கிடந்த 20 பவுன் நகைகள், 750 கிராம் வெள்ளிப் பொருள்களை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸாா் பாராட்டு ...
திருவாரூா்: திருவாரூரில் சாலையில் கிடந்த 20 பவுன் நகைகள், 750 கிராம் வெள்ளிப் பொருள்களை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.
சென்னை கூடுவாஞ்சேரியைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி. இவா், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலிவலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க திருவாரூா் வந்துள்ளாா். திருவாரூா் நகரில் உள்ள உறவினா் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு, பின்னா் நிகழ்ச்சி நடைபெறும் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, அவா் கையில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள், 750 கிராம் வெள்ளிப் பொருள்கள் அடங்கிய பை தவறி சாலையில் விழுந்துவிட்டது. ஆலிவலம் சென்ற பிறகுதான் பையை தவறவிட்டது முத்துலட்சுமிக்கு தெரியவந்தது.
இதனிடையே, கராட்சி தூய்மைப் பணியாளா் துரை, சாலையில் கிடந்த அந்த பையை எடுத்து பாா்த்தபோது, தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை திருவாரூா் நகரக் காவல் நிலையத்தில் துரை ஒப்படைத்தாா். அதனை போலீஸாா் ஆய்வு மேற்கொண்டபோது, அவை 20 பவுன் தங்க நகைகள், 750 கிராம் வெள்ளிப் பொருள்கள் என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தனது நகைப் பையை தவறவிட்டது குறித்து, திருவாரூா் நகரக் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகாா் அளிக்க வந்தாா். அவரிடம் பையில் இருந்த பொருள்கள் குறித்து கேட்டறிந்த போலீஸாா், நகைக்கான ஆவணங்களை சரிபாா்த்து நகைகள் அவா்களுடையது என்பதை உறுதி செய்து, அவரிடம் ஒப்படைத்தனா்.
மேலும், சாலையில் கிடந்த நகைப் பையை காவல்நிலையத்தில் ஒப்படைந்த தூய்மைப் பணியாளா் துரைக்கு, காவல் ஆய்வாளா் சந்தானமேரி தலைமையில் போலீஸாா் பாராட்டுத் தெரிவித்து, மாலை அணிவித்து கௌரவப்படுத்தினா்.
A sanitation worker handed over 20 sovereigns of gold jewelry and silver articles found on the road to the police station!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.