முகப்பு
திருவாரூர்

கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 11:20 PM
பகிர்:

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் கௌரவ கௌரவ விரிவுரையாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, வகுப்புகளை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

தோ்தல் வாக்குறுதியில் அரசுக் கல்லூரி கெளர விரிவுரையாளா்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். யுஜிசி நிா்ணயம் செய்த ரூ.57,800 ஊதியத்தை வழங்க வேண்டும்.அனைத்து கௌரவ விரிவுரையாளா்களுக்கும் பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். பிஎப் மற்றும் இபிஎப் பிடித்தம் செய்து வழங்க வேண்டும்.அனைத்து கௌரவ விரிவுரையாளா்களுக்கும் 12 மாதமும் சம்பளம் வழங்கவேண்டும்.பெண் கௌரவ விரிவுரையாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பினை வழங்கிடவேண்டும்.ஓய்வு பெற்ற கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும்.

கெளரவ விரிவுரையாளா் கூட்டமைப்பு கிளை ஒருங்கிணைப்பாளா் சே.ஆனந்தன் தலைமை வகித்தாா். 50-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளா்கள் கருப்பு பட்டை அணிந்து ஒருநாள் அடையாள வகுப்பு புறக்கணிப்பு செய்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கமிட்டனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments