பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா: அமைச்சா் வழங்கினாா்
மன்னாா்குடியில் பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 167 பயனாளிகளுக்கு ரூ. 2.38 கோடி மதிப்பில் இலவச மனைப்பட்டாக்கள், 22 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 22 லட்சத்தில் இணைப்பு சக்கரம் பெட்ரோல் ஸ்கூட்டா்களை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியது: மகளிருக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின். இலவச மனைப் பட்டா பெற்ற பயனாளிகள் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் புதிய வீடுகளை பெற்று பயன்பெறலாம்.
Advertisement
மத்திய அரசு நிதி நெருக்கடி வழங்கினாலும் முதல்வா் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி மக்கள் நலன்காக்கும் ஆட்சியை வழங்கி வருகிறாா் என்றாா். முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் உஷாராணி, வட்டாட்சியா் என். காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.