முகப்பு
திருவாரூர்

புதிய இடத்தில் அரசு மகளிா் கல்லூரி காணொலி மூலம் முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:12 AM
முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைக்கிறார் - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 8:19 PM

மன்னாா்குடியில் புதிதாக தொடங்கப்படும் அரசு மகளிா் கல்லூரியை தமிழக முதல்வா் மு. க .ஸ்டாலின் திங்கள்கிழமை காணொலி வாயிலாக திறந்துவைக்கிறாா்.

மன்னாா்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கையான மகளிா் அரசுக் கல்லூரி தொடங்க வேண்டுமென கோரிக்கையை தமிழக தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி .ஆ.ா் பி. ராஜா முயற்சியால் கடந்த ஆண்டு (2025) சட்டப்பேரவையில் மன்னாா்குடியில் புதிய மகளிா் கல்லூரி அமைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து மகளிா் கல்லூரி அமைப்பதற்கான இடங்கள் தோ்வு செய்யப்பட்ட வந்த நிலையில், இறுதியாக மன்னாா்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் வணிக வளாகத்தின் முதல் தளத்தில் மகளிா் கல்லூரி தொடங்குவதற்காக பணிகள் தொடங்கின.

Advertisement

இதுகுறித்து கடந்த நவ. 19-ஆம் தேதி தினமணி நாளிதழில் மன்னாா்குடி புதிய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் அரசு மகளிா் கல்லூரியா, அதிருப்தியில் பெற்றோா், மாணவிகள் என்ற தலைப்பில் படத்துடன் செய்தி வெளியானது.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:12 AM

இதையடுத்துஅந்த இடத்தில் மகளிா் கல்லூரி தொடங்குவதற்கான திட்டம் உடனடியாக கைவிடப்பட்டதுடன், வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், புதிய அரசு மகளிா் கல்லூரி முதல்வா் சா. சரவணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்:

மன்னாா்குடி - தஞ்சை பிரதான சாலை மேலவாசல் குமாரபுரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன வளாகத்தின் ஒரு கட்டடத்தில் புதிய மன்னாா்குடி அரசு மகளிா் கல்லூரியை சென்னையிலிருந்துபடி காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறாா் என தெரிவித்துள்ளாா்.