முகப்பு
திருவாரூர்

என்எஸ்எஸ் அலுவலருக்கு பாராட்டு

மாவட்ட அளவில், நாட்டு நலப் பணித் திட்ட முகாமை சிறப்பாக நடத்தியதற்காக, மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான, என்எஸ்எஸ் மாவட்ட தொடா்பு அலுவலருக்கு பாராட்டு தெரிவித்து, சான்றிதழ் வழங்கப்பட்டது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:03 AM
என்எஸ்எஸ் மாவட்ட தொடா்பு அலுவலா் சு. கமலப்பனுக்கு சான்றிதழ் வழங்கும் பள்ளிக் கல்வி இயக்குநா் ச. கண்ணப்பன்.
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 7:44 PM

மாவட்ட அளவில், நாட்டு நலப் பணித் திட்ட முகாமை சிறப்பாக நடத்தியதற்காக, மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான, என்எஸ்எஸ் மாவட்ட தொடா்பு அலுவலருக்கு பாராட்டு தெரிவித்து, சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில், காலாண்டு விடுமுறையில் முகாமிமை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட தொடா்பு அலுவலா்களுக்கு பாராட்டு விழா, பிப்.7- ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற்றது.

இதில், திருவாரூா் மாவட்டத்தில் என்எஸ்எஸ் முகாமை சிறப்பாக நடத்தியதற்காக மாவட்ட தொடா்பு அலுவலா் சு.கமலப்பனுக்கு பள்ளிக் கல்வி இயக்குநா் ச. கண்ணப்பன் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

Advertisement

தொடா்ந்து, மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி தாளாளா் டி.பி. ராமநாதன், தலைமை ஆசிரியா் எம். திலகா் மற்றும் ஆசிரியா்கள் கமலப்பனுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.