முகப்பு
திருவாரூர்

நிகழாண்டு ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவாா்

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:38 AM
திருவாரூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வென்ற அணியினருடன் சென்னை சூப்பா் கிங்ஸ் நிா்வாக இயக்குநா் கே.எஸ். விஸ்வநாதன்.
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 8:08 PM

நிகழாண்டு ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவாா் என சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் நிா்வாக இயக்குநா் கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் அண்மையில் 14, 15 வயதுக்குள்பட்டோருக்கான பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா திருவாரூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் நிா்வாக இயக்குநா் கே.எஸ். விஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

Advertisement

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:38 AM

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழ்நாட்டில் 15, 19, 23 வயதுகளுக்குள்பட்டோருக்கான அணி வீரா்கள் சிறப்பாக விளையாடுகின்றனா். இதற்குக் காரணம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமே. ஏனெனில் கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு உபகரணங்களை வழங்கி அவா்கள் சிறப்பாக விளையாட உதவி வருகிறது கிரிக்கெட் சங்கம். நிகழாண்டு ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவாா் என்றாா்.

திருவாரூா் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சிவசுப்பிரமணியன், செயலாளா் பசுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.