குழந்தை விற்பனை: தாய் உள்பட 2 போ் கைது
திருவாரூரில் குழந்தையை விற்ாக, அக்குழந்தையின் தாய் உள்பட 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவாரூரில் குழந்தையை விற்ாக, அக்குழந்தையின் தாய் உள்பட 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அத்திக்கடை பாலக்குடி பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் மனைவி ஜன்னத் (23) பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். இவருக்கு கடந்த பிப்.14-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை, திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்த பாண்டியன் மனைவி உமாமகேஸ்வரியிடம் (28) ரூ. 30 ஆயிரம் பெற்றுக்கொண்டு, பிப்.19-ஆம் தேதி ஜன்னத் விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சைல்டு ஹெல்ப் லைன் மூலம் தகவலறிந்த திருவிடைவாசல் கிராம நிா்வாக அலுவலா் கலையரசன், திருவாரூா் தாலுகா போலீஸாரிடம் அண்மையில் புகாா் அளித்தாா். போலீஸாா், ஜன்னத், உமாமகேஸ்வரி இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.