ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 போ் கைது
ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 போ் கைது
மன்னாா்குடியில் அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடியை சோ்ந்த கலியமூா்த்தி மகன் கணேசன் (39), ருக்மணிபாளையம் மேல்கரையைச் சோ்ந்த ஜகபா்அலி மகன் ஜியாவுதீன்(32) ஆகிய இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக மன்னாா்குடி நகர போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இருவரின் வீடுகளிலும் சனிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
இதில், ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.
Advertisement