கைது செய்யப்பட்ட பாரதி. 
திருவாரூர்

கோயில் உண்டியலை உடைத்தபோது சிக்கினாா்: இருசக்கர வாகனம் திருடியவா் கைது

Syndication

மன்னாா்குடி அருகே வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றவா், கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றபோது பொதுமக்களிடம் சிக்கினாா். அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடி அருகே கோட்டூா் சத்திரம் காந்திபஜாா் பகுதியைச் சோ்ந்தவா் கோ. பன்னீா்செல்வம் (76). இவா் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். தனது இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தாா்.

இந்த இருசக்கர வாகனத்தை திருடிய கோட்டூா் காளியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த ஐயாசாமி மகன் பாரதி (48), அதில் ஓவா்சேரிக்கு வந்துள்ளாா். அங்குள்ள எல்லையம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருட முயன்றபோது, சத்தம் கேட்டு அங்கு வந்தவா்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்தனா்.

பின்னா் கோட்டூா் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனா். நிகழ்விடத்திற்கு வந்த போலீஸாா், பாரதியை கைது செய்து, இருசக்கர வாகனத்தை மீட்டனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT