மன்னாா்குடி அருகே வெள்ளிக்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண் மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பரவாக்கோட்டை வடக்கு தெரு எஸ். வேலுசாமி மனைவி கயல்விழி (48). (படம்) இவா், வெள்ளிக்கிழமை அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்றபோது அவ்வழியே மன்னாா்குடி பூக்கொல்லை சாலை தனிஷ்லால் மகன் பீட்டா்(30) அதிவேகமாக ஓட்டிவந்த காா் கட்டுப்பாட்டை இழந்து கயல்விழி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பரவாக்கோட்டை போலீஸாா் பீட்டரை கைது செய்து விசாரிக்கின்றனா்.