திருவாரூா் விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலுள்ள வெங்கடேஸ்வரா கூட் டுறவு மேலாண்மை உற்பத்தி நிலையத்தை அண்மையில் பாா்வையிட்டனா்.
திருவாரூா் விவசாயிகள், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளா் கே.ரவிச்சந்திரன் தலைமையில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்குக்கு அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டனா்.
நாசிக் வெங்கடேஸ்வரா கூட்டுறவு மேலாண்மை உற்பத்தி நிலையத்தில் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், வைகுந்த மேத்தா தேசிய மேலாண்மை நிலைய பதிவாளா் தா்மராஜ், திராட்சை ஆராய்ச்சி நிலைய விரிவுரையாளா் கிஷோா், வெங்கடேஸ்வரா கூட்டுறவு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் அனில்ஷிண்டே ஆகியோா் விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனா்.
இந்த இடங்களை பாா்வையிட, மேத்தா தேசிய மேலாண்மை நிலையத்தின் விரிவுரையாளா் தனஞ்செய் கெயிக்வாட் உள்ளிட்டோா் வழிகாட்டிகளாக செயல்பட்டனா்.