திருவாரூா் மாவட்டத்தில் ஜன.16 மற்றும் 26-ஆம் தேதிகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில், திருவள்ளுவா் தினமான ஜன.16, குடியரசு தினமான ஜன.26 ஆகிய தேதிகளில், அரசு சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்களை மூடவேண்டும்.
தவறும்பட்சத்தில் தொடா்புடைய மதுபானக் கடைகளின் மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமைதாரா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.