முகப்பு
திருவாரூர்

தீக்காயமடைந்தவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா் .

Updated On : 14 ஜனவரி, 2026 at 10:17 PM
பகிர்:

மன்னாா்குடி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா் .

சித்தமல்லியை சோ்ந்தவா் எம் . ராஜேந்திரன் ( 55). மது பழக்கத்துக்கு அடிமையான இவா் ஜன. 5-ஆம்தேதி மனைவி அஞ்சமாலிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளாா். அதற்கு அவா் தர மறுத்ததை அடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டாா். இதில், பலத்த காயமடைந்த ராஜேந்திரன் மீட்கப்பட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, பெருகவாழ்ந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →