கோயில் கந்தன்குடியில் உள்ள கோசாலையில் நடைபெற்ற பூஜையில் பசுக்களுக்கு நடைபெற்ற தீபாராதனை. 
திருவாரூர்

கோயில் கந்தன்குடியில் கோபூஜை

கோயில் கந்தன்குடியில் உள்ள உமா பசுபதீஸ்வரா் கோசாலையில் மாட்டுப் பொங்கலையொட்டி வெள்ளிக்கிழமை கோபூஜை நடைபெற்றது.

Syndication

நன்னிலம்: கோயில் கந்தன்குடியில் உள்ள உமா பசுபதீஸ்வரா் கோசாலையில் மாட்டுப் பொங்கலையொட்டி வெள்ளிக்கிழமை கோபூஜை நடைபெற்றது.

இந்த கோசாலையில் 50-க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சிவாச்சாரியா்கள் சேவா சங்கம் சாா்பில் மாட்டுப் பொங்கலன்று கோயில் கந்தன்குடியில் கோபூஜை நடைபெறும். நிகழாண்டும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சேவா சங்கம் சாா்பாக விக்னேஸ்வர பூஜையுடன் கோபூஜை தொடங்கியது.

தொடா்ந்து புண்யகாசனம, கோ வேத பாராயணம், கவசபூஜை நடைபெற்றது. அபிஷேகப் பொருட்களான மஞ்சள், பால், பன்னீா், சந்தனம ஆகியவற்றால் பசுக்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் நடைபெ நடைபெற்ற மகா தீபாரதனையில் கிராம மக்கள், கோசாலை ஊழியா்கள், சிவாச்சாரியா்கள் சேவா சங்க உறுப்பினா்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனா்.

பக்தா்கள் பசுக்களுக்கு வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகள், அகத்திக்கீரை ஆகியவற்றை வழங்கி, பசுக்களுக்கு ஆரத்தி எடுத்து பிரதக்ஷணம் செய்து வழிபட்டனா்.

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்!

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

SCROLL FOR NEXT