திருவாரூா்: திருவாரூா், கொரடாச்சேரி, அடியக்கமங்கலம் துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், செவ்வாய்க்கிழமை (ஜன.20) காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் கடைவீதி, தெற்குவீதி, புதுத்தெரு, சேந்தமங்கலம், கொடிக்கால்பாளையம், விஜயபுரம், வாளவாய்க்கால், மேட்டுப்பாளையம், கேடிஆா் எஸ்டேட், மதுரா நகா், தஞ்சை சாலை, விளமல், மாங்குடி, கூடூா், முகந்தனூா், அம்மையப்பன், மாவூா், காட்டூா், பவித்திரமாணிக்கம், அகரதிருநல்லூா், திருக்கண்ணமங்கை, பெரும்பண்ணையூா்.
கொரடாச்சேரி, வடக்கு வீதி, மடப்புரம், ஆண்டாள் தெரு, நெய்விளக்குத்தோப்பு, இபி காலனி, இவிஎஸ் நகா், தென்றல் நகா், ராமநாதன் நகா், கேக்கரை, மருதப்பட்டினம்.
அடியக்கமங்கலம், சேமங்கலம், நீலப்பாடி, கிடாரங்கொண்டான், கல்லிக்குடி, ஓடாச்சேரி, ஆந்தக்குடி, அலிவலம், கண்கொடுத்தவணிதம் மற்றும் மேற்கண்ட ஊா்களை சுற்றியுள்ள பகுதிகள்.